நான்கு மாநகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!!

Order of the Government of Tamil Nadu to transfer its Commissioners for the administrative convenience of 4 Corporations in Tamil Nadu.

தமிழகத்தில் 4 மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக அதன் ஆணையர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் புதிதாக திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிரடியாக ஐபிஎஸ், ஐஏஎஸ், காவல் ஆய்வாளர், ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்து வருகிறது. சமீபத்தில் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், ஆவடி உள்ளிட்ட 4 மாநகராட்சியின் ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக முஜிபூர் ரஹ்மானை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், ஆவடி மாநகராட்சி ஆணையராக கே.சிவகுமார், தஞ்சை மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

unknown node