தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. இதனால், வரும் 5 முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது, தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை இயங்கி வருகின்றன.
இந்நிலையில், இன்று தமிழக அரசு அறிவித்துள்ள ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில், வரும் 5-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, இதர பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.