இந்திய பொதுவாழ்வுக்கே மிகப்பெரிய இழப்பு – வைகோ இரங்கல்

The General Secretary of Madhyamaka has condoled the death of the senior leader of the Communist Party of India, D. Pandian.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் தா.பாண்டியன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கு மட்டுமல்ல, இந்திய பொதுவாழ்வுக்கே மிகப்பெரிய இழப்பு என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.