நீட் தேர்வு மசோதா.! தமிழக அரசிடம் மீண்டும் விளக்கம் கேட்ட மத்திய அரசு.!

நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு மீண்டும் விளக்கம் கேட்டுள்ளது.

நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு மீண்டும் விளக்கம் கேட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விலக்க மசோதா நிறைவேற்றப்பட்டு அந்த மசோதா மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இதனை தொடர்ந்து ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் நீட் விலக்க மசோதா குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

அதில் 10 கேள்விகள் கேட்டகப்பட்டு இருந்தது, அதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம், சட்ட வல்லுநர்கள் உதவியுடன் பதில் அளித்து இருந்தது. இதனை தொடர்ந்து தற்போதும் அதே போல, நீட் விலக்கு மசோதாவுக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கு மீண்டும் சட்ட வல்லுநர்கள் உதவியுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் ஓரிரு வாரங்களில் பதில் அளிக்கவுள்ளது.