ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, மோடி பிரிவினரை இழிவுபடுத்தியதாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ராகுல்காந்தி சஸ்பெண்ட் :
unknown nodeமக்கள் பிரதிநிதிகள் சட்டப்பிரிவு படி, 2 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் சிறை தண்டனை பெற்றால் அவர் மக்கள் பிரதிநிதி பொறுப்பில் இருக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி, ராகுல்காந்தியை வயநாடு மக்களவை தொகுதி எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி , எதிர்க்கட்சியினர் பலரும் தங்கள் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர்.
ரயில் மறியல் :
unknown nodeராகுல்காந்தி தகுதிநீக்க நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 15) பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தனர்.
சென்னை – சேலம் :
unknown nodeஅதன்படி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய தலைவர்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் போராட்டத்தில் ஈடுப்பட்ட 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அடுத்து சேலத்தில் ரயில் மறியல் ஈடுபட்ட 150க்கும் மேற்ப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ரயில் மறியல்கள் :
unknown nodeபுதுக்கோட்டையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல, தமிழகம் முழுவதும் சுமார் 70க்கும் மேற்பட்ட இடஙக்ளில் ரயில் மறியல் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.