அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்.! இன்று மாலை நேரில் ஆஜர்.!

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி நேரில் ஆஜராகி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

DMK MP gautama sigamani and Minister Ponmudi

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி நேரில் ஆஜராகி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சட்டவரிரோத பணப்பரிவர்த்தனை, அந்நிய செலவாணி முதலீடு உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மற்றும் அவரது மகன் திமுக எம்பி கெளதம சிகாமணி ஆகியோர் வீடு, அலுவலகங்களில் நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வந்தனர்.

சென்னை, சைதாப்பேட்டை வீடு அலுவலகம், விழுப்புரத்தில் உள்ள வீடு அலுவலகம் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையானது சுமார் 9 நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்றது. இதனை அடுத்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோரை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

சைதாப்பேட்டை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் திமுக எம்பி கௌதம சிகாமணி ஆகியோரிடம் தனித்தனியே சுமார் 7 மணிநேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் இந்த விசாரணை முடிவுக்கு வந்தது.

அமலாக்கத்துறை சோதனையில் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்ததாகவும், அவர்களிடம் இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து இன்று மலை 4 மணி அளவில் மீண்டும் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்.! இன்று மாலை நேரில் ஆஜர்.!