அமைச்சரின் நண்பர்கள், உறவினர்களிடம் 6வது நாளாக வருமானவரித்துறை சோதனை.! உணவகத்திற்கு சீல்.?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் அலுவலகங்களில் 6வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

Income Tax

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் அலுவலகங்களில் 6வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் கடந்த 26ஆம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை எனது வீட்டில் நடைபெறவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி அப்போதே விளக்கம் அளித்துவிட்டார்.

இந்த வருமான வாரிசோதனையானது இன்று 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நபர்கள் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுவதாகவும், ஒப்பந்தரர்களின் வீடுகளிலும் 6வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது எனவும் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி நண்பர் ஒருவரின் உணவு விடுதிக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.