ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
ஆவின் பால் விலை தொடர்ந்து நெய் விலை தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கு அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் ஆவின் வெண்ணெய் விலை அரை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராமுக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டிருக்கிறது. நெய் விலை நேற்று லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், வெண்ணெய் விலையையும் ஆவின் உயர்த்தியிருப்பது மக்களை கடுமையாக பாதிக்கும்!’ என பதிவிட்டுள்ளார்.
unknown node