விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சியே... ஆனால்.? வைகோ கருத்து.!

பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்ற எந்த தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை. - வைகோ.

பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்ற எந்த தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை. – வைகோ.

இன்று காலை தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக தமிழர் பேரவை தலைவர் பழ நெடுமாறன் கூறுகையில், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் , அவர் குடும்பத்தாருடன் தான் தொடர்பில் இருப்பதுவும், அவர்களின் அனுமதியோடு இந்த தகவலை கூறுவதாகும் அவர் தெரிவித்தார்.

வாய்ப்பில்லை :இவரது கருத்துக்கள் தமிழக அரசியலில் மட்டுமல்லாது உலக அரசியல் களம் வரையில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதற்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டு விட்டார் என கூறியுள்ளனர்.

போராளிகள் உறுதிப்படுத்தவில்லை :இந்நிலையில், மதிமுக தலைவர் வைகோ கூறுகையில், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே, இந்த செய்தியை விட தமிழகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி இல்லை எனவும் அவர் தெரிவித்தார். ஆனாலும்,  இதுவரையில், பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்ற எந்த தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை எனவும் வைகோ கூறினார்.