#Breaking:அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு..!

The TN govt has instructed the principals to check the marks taken by the 12th class students in the 10th class and upload them on the internet

12 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் உடல்நலன், மனநலனை கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.

இதனையடுத்து,12-ம் வகுப்பு மாநில பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், அகமதிப்பீட்டு மதிப்பெண் முறையை 10 நாளைக்குள் உருவாக்கவேண்டும் என்றும், அந்த மதிப்பெண்களை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்நிலையில்,12 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தமிழக தேர்வுத்துறை இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,”அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை சரிபார்த்து,அதனை நாளை முதல் ஜூன் 30 ஆம் தேதிக்குள்http://www.dge.tn.gov.in/என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும்,சரிபார்க்கப்பட்ட சான்றிதழ்களுக்கான பட்டியலை மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குனரிடம் வழங்க வேண்டும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.