உடல்நலக்குறைவு காரணமாக டிடிவி தினகரன் தஞ்சை மருத்துவமனையில் அனுமதி.
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், ‘சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node