கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்த பயனும் இல்லை – அண்ணாமலை

கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்த பயனும் இல்லை என அண்ணாமலை ட்வீட்.

கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்த பயனும் இல்லை என அண்ணாமலை ட்வீட்.

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் கருப்பு பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்று ஊட்டச்சத்து தொகுப்பு டென்டரை வழங்கப்போவதாக ஆதாரங்களை வெளியிட்டதையடுத்து, திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்த பயனும் இல்லை. கருப்பு பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்று ஊட்டச்சத்து தொகுப்பு டென்டரை வழங்கப்போவதாக ஆதாரங்களை பாஜக வெளியிட்டது.

அந்த டென்டரில் பங்கேற்ற வேறொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக செய்தியைப் பார்த்தோம். பாஜகவைத்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக வேறு வழியின்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், எங்கள் குற்றச்சாட்டை ஏற்ற திமுகஅரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

லஞ்ச ஒழிப்புத் துறையில் பாஜகஅளித்த புகாரையும், திமுகஅரசு விசாரித்து குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். மேலும் ஆவின் health mixன் நிலை என்ன என்பதையும் திமுகஅரசு தெளிவுபடுத்த வேண்டும்.’ என்றும் பதிவிட்டுள்ளார்.

unknown node