உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்பில் குறைபாடு.? கர்நாடகாவில் நடந்தது என்ன.?

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பு கன்வாயில் இரு சக்கர வாகனம் உள்ளே புகுந்ததால் பரபரப்பு நிலவியது.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பு கன்வாயில் இரு சக்கர வாகனம் உள்ளே புகுந்ததால் பரபரப்பு நிலவியது.

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அம்மாநிலத்திற்கு முக்கிய அரசியல் தலைவர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. அப்படி தான் அமித்ஷா நேற்றைய பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஞாயிறு இரவு பெங்களூரு வந்தார்.

அமித்ஷா வருகை :

டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர் , விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்போடு சென்று கொண்டு இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரெனெ பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிட்டனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் :

பிறகு அவர்களை காவலர்கள் பின்தொடர்ந்ததும், காவலர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளனர். இருந்தும் காவலர்கள் விரட்டி அவர்களை பிடித்தனர்.

மாணவர்கள் :

பின்னர் அவர்களை விசாரிக்கையில், அவர்கள் இருவரும் மாணவர்கள், இம்ரான் மற்றும் ஜிப்ரான் என்றும் , தவறுதலாக பாதுகாப்பு வளையத்திற்குள் வந்ததும் , அதன் பிறகு காவல் துறை துரத்தியதும், பயந்து போய் தப்பிக்க நினைத்ததும் தெரியவந்துள்ளது.