உரிமை இல்லாத மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு.? – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லையா.? அந்த உரிமை இல்லாத மாநிலத்திற்கு தான் ஆளுநர் இருக்கிறாரா.?  - முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லையா.? அந்த உரிமை இல்லாத மாநிலத்திற்கு தான் ஆளுநர் இருக்கிறாரா.?  – முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

75ஆண்டை நிறைவு செய்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பவள விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

சமூக நிதி, சகோதரத்துவம் , சமதர்மம் :

அப்போது அவர் பேசுகையில்,  சமூக நிதி, சகோதரத்துவம் , சமதர்மம் இவை தான் நாட்டை காக்கும் ஒரே கொள்கை. இதைத்தான் தமிழகம் பின்பற்றுகிறது. என கூறினார். மேலும், பெருசுகையில், ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மொழி, ஒரே தேர்வு என்பது சகோதரத்துவத்திற்கு எதிரானது என மத்திய அரசு விமர்சித்தது.

ஆளுநர் ஏன்.?  :

அடுத்ததாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து பேசுகையில், 4 மாதங்களாக சட்ட மசோதாவை கிடப்பில் வைத்து விட்டு இறுதியில் மாநில அரசுக்கு உரிமை இல்லை என கூறுகிறார்கள். இந்த சாதாரண சட்டத்திற்கு கூட உரிமையில்லாத  மாநிலத்திற்கு தான் ஆளுநர் பொறுப்பில் ஒருவர் இருக்கிறார். என விமர்சித்தார்.

2024 தேர்தல் முற்றுப்புள்ளி :

அடுத்தாக, விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மை சட்டம் நிறைவேறும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான குடியுரிமை சட்டம் உடனே நிறைவேறும். ஏழை மாணவர்கள் மருத்துவ கனவை கலைக்கும் நீட் தேர்வு மசோதா உடனடியாக நிறைவேறும். இந்தி திணிப்பார்கள் ஆனால், ஆன்லைன் சூதாட்டத்தால் பலியாகும் உயிர்களுக்காக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்ற மறுப்பார்கள். 2024 தேர்தல் அனைத்துக்கும் முற்றுப்புள்ளியாக அமைய போகிறது . என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

உரிமை இல்லாத மாநிலத்திற்கு ஆளுநர் எதற்கு.? – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!