பாஜகவை நம்பி செல்கிறவர்கள் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.
கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிமுக தற்போது கேப்டன் இல்லாத படகு போன்று சென்று கொண்டிருக்கிறது. கொள்கையும் இல்லை! கோட்பாடும் இல்லை! தலைமையும் இல்லை, என்ற நிலையில் உள்ளது. தமிழ்நாடு திராவிட மண் இங்கு பாஜகவிற்கு இடமில்லை, பாஜகவை நம்பி செல்கிறவர்கள் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node