ரூ.2,713 கோடி விளம்பர செலவு.! மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்.!

நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேற்று முதல் துவங்கப்பட்ட மழைக்கால கூட்டத்தொடரில், கடந்த 2018 முதல் நடப்பாண்டு வரை மத்திய அரசு விளம்பரத்திற்காக எவ்வளவு ரூபாய் செலவு

Union Minister Anurag thakur

நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேற்று முதல் துவங்கப்பட்ட மழைக்கால கூட்டத்தொடரில், கடந்த 2018 முதல் நடப்பாண்டு வரை மத்திய அரசு விளம்பரத்திற்காக எவ்வளவு ரூபாய் செலவு செய்துள்ளது என மாநிலங்களவை உறுப்பினர் செய்யது குஷன் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில்  கடந்த 2018 முதல் தற்போது வரை அரசு திட்டங்களை மக்களுக்கு விளம்பரப்படுத்த 2,713 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும், அதில் அதிகபட்சமாக, 2018- 2019இல் மட்டுமே 1106 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது