நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், இன்று 2-வது நாளாக சென்னை கமலாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், நேற்று ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று 2-வது நாளாக சென்னை கமலாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.