மாணவர்களை பாதுகாக்க சிஆர்பிஎப் வீரர்களை பயன்படுத்துங்கள்-ஸ்டாலின்

தமிழக அரசியலில் முக்கியமானவர்களுக்கு  சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கப்படும்.கடந்த சில தினங்களாக மத்திய அரசு ஓவ்வொருவரின் பாதுகாப்பை திரும்பப்பெற்று வருகிறது.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும்   சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் நீக்கப்பட்டது.

பல்கலைகழகங்கள் மற்றும் மாணவர்களை பாதுகாக்க சிஆர்பிஎப் வீரர்களை பயன்படுத்துமாறு ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

தமிழக அரசியலில் முக்கியமானவர்களுக்கு  சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கப்படும்.கடந்த சில தினங்களாக மத்திய அரசு ஓவ்வொருவரின் பாதுகாப்பை திரும்பப்பெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் இந்த வகை பாதுகாப்பு  வழங்கப்பட்டு வந்த நிலையில் ,தற்போது இந்த பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டது.

unknown node

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,கடந்த பல ஆண்டுகளாக எனக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு வழங்கிய ஒவ்வொரு சிஆர்பிஎப் வீரருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டிவிடுபவர்களிடம் இருந்து பல்கலைகழகங்கள் மற்றும் மாணவர்களை பாதுகாக்க சிஆர்பிஎப் வீரர்களை பயன்படுத்துமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.