உத்தரபிரதேசம் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 17 மேயர் தொகுதிகளில் நான்கில் பாஜக வெற்றி பெற்றது, மீதமுள்ள இடங்களில் முன்னிலையில் உள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மே 4 மற்றும் மே 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப்பதிவு மே 4-ஆம் தேதி 37 மாவட்டங்களிலும், 2ஆம் கட்டமாக 38 மாவட்டங்களுக்கு மே 11ஆம் தேதியும் நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அயோத்தி, ஜான்சி மற்றும் சஹாரன்பூர் மற்றும் விருந்தாவன்-மதுரா ஆகிய நான்கு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வெற்றிபெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதியில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
ஜான்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் பிஹாரி லால் ஆர்யா 83,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கிடையில், சஹாரன்பூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு அஜய் குமாரும், அயோத்தியில் இருந்து கிரிஷ்பதி திரிபாதியும் வெற்றி பெற்றனர்.
