எம் தலைவன் அவர்களின் நினைவுநாளில் அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, புரட்சித்தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி என ஈபிஎஸ் ட்வீட்.
இன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘வாரி வாரிக் கொடுத்த வள்ளல், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி, எம் தலைவன் அவர்களின் நினைவுநாளில் அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, புரட்சித்தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி’ என பதிவிட்டுள்ளார்.
unknown node