ஆட்டோவில் பயணித்து ஆதரவு திரட்டும் வானதி சீனிவாசன், கமல்ஹாசன்..!

வானதி சீனிவாசன், கமல்ஹாசன் பொதுமக்களையும் நேரில் சந்தித்தும், ஆட்டோவில் பயணித்தும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

வானதி சீனிவாசன், கமல்ஹாசன் பொதுமக்களையும் நேரில் சந்தித்தும், ஆட்டோவில் பயணித்தும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, நேற்று கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடம்  பாஜக வேட்பாளர்  தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனும் வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டனர். இதனால், இரண்டு வேட்பாளர்களும்  பொதுமக்களையும் நேரில் சந்தித்தும், ஆட்டோவில் பயணித்தும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இன்று காலை கமல்ஹாசன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பொதுமக்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். முதலில் கமல்ஹாசன் நடைப்பயிற்சி மேற்கொண்டது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை. சிறிது நேரத்துக்குப் பின்னரே கமல் என தெரிந்தது. அப்போது சாலையோரம் நடந்தவாறு வாக்கு சேகரித்தார்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் கமல் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோவில் பயணித்து ஆதரவு திரட்டும் வானதி சீனிவாசன், கமல்ஹாசன்..!