உடல் மெலிந்து உருக்குலைந்த புத்தர்... திருமாவளவன் பகிர்ந்த வரலாற்று தகவல்.!

தெலுங்கானாவில் அமைந்துள்ள புத்தவனத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் சென்றிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், புத்தர் பற்றிய குறிப்புகளையும்

தெலுங்கானாவில் அமைந்துள்ள புத்தவனத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் சென்றிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், புத்தர் பற்றிய குறிப்புகளையும் டிவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு புத்தர் தோற்றுவித்த பௌத்த மதமும், புத்தர் போதனைகளும் மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. அவர் தெலுங்கானாவில் புதியதாக அமையப்பற்றுள்ள புத்தவனத்திற்கு சென்றுள்ளார். அந்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

unknown node

புத்தவனம் :அதில்,தெலங்கானாவில் 274 ஏக்கர் பரப்பளவில் 71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புத்தவனம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அப்போது ஆந்திராவுடன் ஒருங்கிணைந்து தெலுங்கானா இருந்தபோது காங்கிரஸ் ஆட்சியின் காலத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது சந்திரசேகர ராவ்ஆட்சியின்போது நிறைவுபெற்றுள்ளது. எனவும்,

சுற்றுலாத் தலம் :தாமரை வடிவ பிரமாண்டமான தியான மண்டபத்தில்கௌதமபுத்தர் சிலை நிறுவபெற்றுள்ளது. அதன் முன்பு அமர்ந்து தியானம் செய்தோம். எனவும் , இந்த புத்தவனம் கிருஷ்ணா நதிக்கரையில் நாகார்ஜுனா சாகர்அணைக்கட்டு அருகே அமைந்திருப்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகும் எனவும், இது உலகளாவிய அளவில் பௌத்தர்களைக் கவரும் மகத்தான சுற்றுலாத் தலமாகப் புகழ்பெறும். எனவும் பதிவிட்டு இருந்தார்.

unknown node

உருக்குலைந்த புத்தர் :அடுத்ததனாக இன்னோர் புத்தர் சிலையை புகைப்படம் எடுத்து பதிவிட்டு இருந்தார். அந்த புத்தர் சிலையில் அவரது உடல் மெலிந்த தோற்றத்தில் இருந்தது. அதனை குறிப்பிட்ட திருமாவளவன் , உணவு, குடிநீர் ஏதும் ஏற்காமல் புத்தர் கடும் தவமிருந்தார். அப்போது அவர்உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய் உருக்குலைந்தார். எனினும் மானுடவாழ்வு குறித்த அவரது தேடலுக்கு விடை கிட்டவில்லை என்பதால் அத்தவத்தைக் கலைத்தார். அது அவரது வாழ்க்கையின் ஒரு பகுதி. அத்தோற்றத்தைக் குறிக்கும் உருவச்சிலை. தான் இந்த உடல் மெலிந்த புத்தர் சிலை என விளக்கினார்.

unknown node