பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள்?- அதிமுகவுடன் பேச்சுவார்த்தை.!

With 23 constituencies allotted to PMK, PMK is in talks with AIADMK to finalize the constituencies.

பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தொகுதிகளை இறுதி செய்ய அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தை.

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது, ஆனால் எந்தந்த தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், பாமக நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளனர். பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தந்த தொகுதிகள் என இறுதி செய்ய அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டல் லீலா பேலஸில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டுள்ள நிலையில், பாமக நிர்வாகிகள் ஜிகே மணி மற்றும் ஏகே மூர்த்தி அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளனர் என கூறப்படுகிறது. பாமக கேட்கும் தொகுதிகளில் சிலவற்றை பாஜகவும் வலியுறுத்துவதால் பேச்சுவார்த்தை நடத்த பாமகவினருடன் ஆலோசனை நடத்தப்படுகிறது என கூறப்படுகிறது.