பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று அவரது 67-வது பிறந்த நாள் விழாவானது அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘நவ.26 மேதகு பிரபாகரன் பிறந்தநாள். உலகத்தமிழர் யாவருக்கும் இனிய வாழ்த்துகள். தமிழினத்தை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்தவர். இந்தியப் பேரரசு, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசுகள் ஆகியவற்றின் கூட்டுச்சதியை எதிர்த்து உறுதி குலையாமல் போராடியவர்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node