தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்.? சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது 13 பேர் காவல்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. அதிமுக ஆட்சியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திமுக ஆட்சிக்கு வந்த்ததும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினர். இன்று சட்டப்பேரவை பட்ஜெட் விவாத கூட்டத்தொடர் நிறைவு நாளை முன்னிட்டு முதல்வர் பதிலுரை வழங்கினார். அப்போது துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர்.
முதல்வர் பேசுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்.? அதனை மட்டும் ஏன் எதிர்க்கட்சி தலைவர் கூற மறுக்கிறார்.? முதலமைச்சராக இருந்தாலும் சொல்ல மறுத்துவிட்டார் .இப்போதும் சொல்ல மறுத்துவிட்டார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.மேலும், கொடநாடு கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை இபிஎஸ் மீது முதல்வர் முன்வைத்தார்.