பத்திரிகையாளர்கள் குறித்து நான் பேசியதை தவறாக சித்தரித்து பரப்புகின்றனர் என அண்ணாமலை பேச்சு.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கோவையில் முழு கடையடைப்புக்கு பாஜக மாநில தலைமை நிர்பந்திக்காது” கோவை பந்த் குறித்து மாவட்ட பாஜக மற்றும் மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
கோவை வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்காமல் 4 நாட்கள் தாமதப்படுத்தியது ஏன்? மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என டிஜிபி கூறுகிறார். அக்.18ம் தேதியே மத்திய உளவுத்துறை மாநில அரசுக்கு தகவல் கொடுத்துள்ளது. 18ஆம் தேதியே தகவல் வந்தும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை?
பத்திரிகையாளர்கள் குறித்து நான் பேசியதை தவறாக சித்தரித்து பரப்புகின்றனர். பத்திரிகையாளர்களிடம் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.