மகனை இழந்து வாடும் சீதாராம் யெச்சூரி ஜி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி என மோடி தெரிவித்துள்ளார்.
சீதாராம் யெச்சூரி மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹோலி குடும்ப மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் தான் குர்கானுக்கு மாற்றப்பட்டார்.
இரண்டு வரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆஷிஷ் யெச்சூரி மறைவை தொடர்ந்து பல தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டரில் மகனை இழந்து வாடும் சீதாராம் யெச்சூரி ஜி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.
unknown node