பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம் சக கிரிக்கெட் வீரரின் காதலியுடன் மெசேஜ் மற்றும் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக கூறப்படும் புகைப்படங்களும், வீடியோக்களும் நேற்று இணையத்தில் வைரலான நிலையில், இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அதில் பாபர் அசாம் “என்னுடன் நீ அடிக்கடி இப்படி பேசி வந்தால் உன் காதலனை அணியில் இருந்து தூக்க மாட்டேன்” என்று கூறுவது போல குறிப்பிடபட்டிருந்தது.
ஆனால், அந்த மற்றொரு வீரர் யாரென்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஒரு பக்கம் பாபர் அசாம் ரசிகர்கள் அவருடைய பெயரை கெடுக்கவே இந்த மாதிரி கேவலமான தகவல்கள் சிலர் லீக் செய்து வருகிறார்கள் என ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இது உண்மையா..? அல்லது வதந்தியா..? என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தினால் மட்டுமே தெரியவரும். இந்த கசிந்த வீடியோக்கள் மற்றும் உரைகள் குறித்து பாபர் ஆசாமோ அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ (பிசிபி) இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து, பாபர் அசாம் தனது ட்வீட்டர் பக்கத்தில் சிரித்துக்கொண்டு கடலை ரசித்தபடி இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு இதுயெல்லாம் இயல்பானது என்றும், இந்த சர்ச்சை தன்னை தொந்தரவு செய்யவில்லை என்று கூறுவது போல குறிப்பிட்டுள்ளார்.
unknown node