நார்வே செஸ் : குகேஷ் கனவுக்கு செக் வைத்த ஃபேபியானோ…மீண்டும் சாம்பியனான மக்னஸ் கார்ல்சன்!
உலக நம்பர் 1 வீரரும் செஸ் மாஸ்டருமான மக்னஸ் கார்ல்சன், நோர்வே செஸ் 2025 தொடரில் மின்னலாகச் சென்று சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த காரணத்தால் இந்த தொடர் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்தது. விறு விறுப்பாக தொடங்கி நிறைவடைந்த இந்த செஸ் தொடரில் உலக நம்பர் 1 வீரரும் செஸ் மாஸ்டருமான மக்னஸ் கார்ல்சன், நோர்வே செஸ் 2025 தொடரில் மின்னலாகச் சென்று சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார்.
அதே சமயம் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்தார். 10-வது சுற்றான இறுதி சுற்றில் குகேஷ், அமெரிக்காவின் அனுபவம் வாய்ந்த வீரர் ஃபேபியானோ கருவானாவுடன் மோதினார். இந்த ஆட்டம் ஆரம்பத்திலேயே இருவருக்கும் கடுமையான போட்டியாக இருந்தது. ஆனால் முடிவில், நேரம் மிக குறைந்த நிலையில்,அதாவது வெறும் சில விநாடிகள் மட்டுமே இருக்கும் நேரத்தில், குகேஷ் ஒரு பெரிய தவறான முன்னேற்றத்தை (tactical blunder) செய்தார்.
அந்த தவறை கருவானா உடனே பயன்படுத்தி, ஆட்டத்தை தனது வசமாக மாற்றினார். இதனால்தான் குகேஷ் அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தார். அந்த ஒரு பிழையே அவரது சாம்பியன் கனவுக்கு முடிவை கொண்டு வந்தது. ஏனென்றால், குகேஷ், கருவானாவை வென்றிருந்தால், அவருக்குத் மொத்தம் 16.5 புள்ளிகள் கிடைத்திருக்கும்.
அதாவது மக்னஸ் கார்ல்சனை விட அரை புள்ளி அதிகமாக இருந்திருக்கும். அப்படியென்றால், குகேஷ் தான் 2025 நோர்வே செஸ் சாம்பியனாக அறிவிக்கப்பட்டிருப்பார். ஆனால், கடைசி நேரம் சற்று தடுமாறி கடைசி சுற்றில் தோல்வி அடைந்தது பெரிய சோகமான விஷயமாகவும் அமைந்துள்ளது.
அதே சமயம், இறுதி சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியுடன் மக்னஸ் கார்ல்சன் மோதினார். தொடக்கத்தில் கார்ல்சன் தோல்வி அடைந்துவிடுவார் என்கிற வகையில் அர்ஜுன் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்தார். ஆனாலும், மக்னஸ் தனது தனித்துவமான அழுத்தமில்லா ஆட்டம், நிதானமான கணிப்பு மற்றும் முடிவட்ட (Endgame) திறமையின் மூலமாக, நிலைமையை மெல்ல மெல்ல சமப்படுத்தினார். போட்டியின் இறுதி பகுதிகளில், இருவரிடமும் நேரம் மிக மிகக் குறைவாக இருந்தது.
அந்த நேர அழுத்தத்தில், இருவரும் பாதுகாப்பான முறையில் செயல்பட்டு டிராவை (Draw) ஏற்றுக்கொண்டனர். எனவே, இருவருக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில் 15 புள்ளிகளில் இருந்த கார்ல்சன் 16 புள்ளிகள் பெற்று மீண்டும் சாம்பியன் ஆனார். ஏற்கனவே, 2016, 2019, 2020,2021, 2022 ஆகிய ஆண்டுகளிலும் வெற்றி பெற்று இந்த ஆண்டும் இவர் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளி விவரப்பட்டியல் (ஆன்கள்)
- மக்னஸ் கார்ல்சன் – 16 புள்ளிகள்
- ஃபேபியானோ கருவானா – 15.5 புள்ளிகள்
- குகேஷ் டொம்மராஜு – 14.5 புள்ளிகள்
- ஹிகாரு நகமுரா – 14 புள்ளிகள்
- அர்ஜுன் எரிகைசி – 13 புள்ளிகள்
- வேய் யீ – 9.5 புள்ளிகள்
பெண்கள்
- அன்னா முஸ்யுசுக் – 16.5 புள்ளிகள்
- லெய் டிங் ஜீ – 16 புள்ளிகள்
- கோனேரு ஹம்பி – 15 புள்ளிகள்
- ஜூ வென்ஜுன் – 13.5 புள்ளிகள்
- வைஷாலி ரமேஷ்பாபு – 11 புள்ளிகள்
- சாரா காதேம் – 9 புள்ளிகள்
லேட்டஸ்ட் செய்திகள்
ஜூன் 11-14 வரை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!
June 7, 2025