தோனியின் சாதனை முறியடிக்க காத்திருக்கும் கோலி.. சாதிக்க இன்று வாய்ப்பு..!

- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனை முயடிக்க காத்திருக்கும் கோலி
- இன்று முறியடித்தால் புதிய சாதனை படைக்க கோலிக்கு வாய்ப்பு
சர்வதே கிரிக்கெட்டில் அந்தந்த அணிகளின் கேப்டனாக இருந்து அதிவேகமாக 5000 ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பது தான் அந்த சாதனை. அத்தகைய பட்டியலில் தற்போது வரை முதலிடத்தில் முத்தமிட்டு இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி.
தோனியின் இந்த சாதனையை இன்று 19-01-2020) பெங்களூரு சின்னசாமி விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கின்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பு உள்ளது.
இந்த சாதனையை நிகழ்த்த விராட்கோலிக்கு 17 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இன்றைய போட்டியில் அதை நிகழ்த்துவார் என்று கிரிக்கெட் உலகத்தால் எதிர்பார்க்கப் படுகிறது. இந்திய அணியின் தூணாகவும் கேம் சேஞ்சராக வலம் வந்த தோனி, இந்த சாதனையை தனது 127 இன்னிங்ஸில் நிகழ்த்தி அசத்தி இருந்தார்.இதற்கு முன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 131 இன்னிங்க்ஸில் 5000 ரன்களை வேகமாக கடந்தவராக இருந்தார்.
(அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்த கேப்டன்களின் பட்டியல்)
- மகேந்திரசிங்தோனி – இந்திய அணி கேப்டன் – 127 இன்னிங்ஸ்
- ரிக்கிபாண்டிங் – ஆஸ்திரேலிய அணி கேப்டன் – 131 இன்னிங்ஸ்
- க்ரீம்ஸ்மித் – தென்னாப்பிரிக்க அணி கேப்டன் – 135 இன்னிங்ஸ்
- சவுரவ்கங்குலி – இந்திய அணி கேப்டன் – 136 இன்னிங்ஸ்
- முகமது அஸாருதீன் – இந்திய அணி கேப்டன் – 151 இன்னிங்ஸ்
அவரை தான் தனது 127 இன்னிங்ஸில் அதிவேகமாக 5000 ரன்களைத் தாண்டி தோனி இரண்டாமிடத்திற்கு தள்ளினார் . ஆனால் தற்போது ரன் மெஷின் என்று வர்ணிக்கப்படும் இந்திய கேப்டனாக உள்ள விராட் கோலிக்கு இத்தகைய சாதனையை செய்வதற்கு அத்தனை இன்னிங்ஸ் எல்லாம் தேவைப்படவில்லை. காரணம் விராட் கேப்டனாக இதுவரை 81 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 4983 ரன்களை விளாசி அசத்தி உள்ளார்.
எனவே இவருக்கு இன்னும் 17 ரன் மட்டுமே தேவைப்படுவதால் இன்று நடைபெறும் போட்டியின் மூலம் இதனை நிகழ்த்த அவருக்கு வாய்ப்பு உள்ளது அவ்வாறு நிகழ்த்தினால் 81 இன்னிங்ஸில் 5000 ரன் களை கடந்த கேப்டன் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். கோலியின் இந்த சாதனையை முறியடிக்க இன்னொரு கோலியால் தான் முடியும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.