சர்வதேச கிரிக்கெட்டில் 2,000 மேட்ச்கள்! இங்கிலாந்து புதிய சாதனை.!

2,000 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இங்கிலாந்து அணி, புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

2,000 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இங்கிலாந்து அணி, புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய காலத்திலிருந்து தற்போது வரை இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி, மொத்தமாக அனைத்து வித போட்டிகளிலும் சேர்த்து 2,000 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.  முல்தானில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் 2,000ஆவது போட்டியாகும். இங்கிலாந்து அணி, 1,057 டெஸ்ட், 773 ஒருநாள் மற்றும் 170 டி-20 போட்டிகளில் என 2,000 போட்டிகளில் விளையாடி இந்த வரலாறு படைத்துள்ளது.

இங்கிலாந்து விளையாடிய முதல் 1,999 போட்டிகளில் 864ல் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.