ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் நேற்று ‘ஏ’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடியது.
இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
unknown nodeஇந்த போட்டியில் பந்துவீசிய போது இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியின் பாதியிலேயே பாண்டியா வெளியேறினார்.எனவே காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா முழுவதுமாக விலகி உள்ளதாக தகவல் வெளியானது.
unknown nodeஇந்நிலையில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் ஹர்டிக் பாண்டியாவுக்கு பதில் அணியில் தீபக் சாகர் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதேபோல் அக்சார் பட்டேலுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.அதேபோல் சர்தால் தாகூருக்கு பதிலாக சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node