3 -வது ஒரு நாள்: இந்திய அணிக்கு 244 ரன்கள் வெற்றி இலக்கு!!பந்துவீச்சில் சமி அபாரம் !!

3 -வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3 -வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே  5 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடர் நடைப்பெற்று வருகிறது.

3 -வது ஒரு நாள் போட்டியில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக விக்கெட் கீப்பர் தோனி அணியில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார்.அதேபோல்  விஜய் சங்கர் நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டார்.

unknown node

பின்னர் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி   49 ஓவர்களில் 243 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 93  ரன்கள் அடித்தார். இந்தியாவின் பந்துவீச்சில் சமி 3, சாஹல்,புவனேஸ்வர் குமார் ,பாண்டியா தலா   2 விக்கெட்டுகள்  வீழ்த்தினர்.

இதனால் இந்திய அணிக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.