கனடாவில் நடைபெறும் குளோபல் டி20 போட்டியில் வான்கவுவர் நைட்ஸ் அணியும் , எட்மொண்டன் அணியும் நேற்று முந்தினம் மோதியது.இப்போட்டியில் வான்கவுவர் அணிக்காக கெயில் விளையாடி வருகிறார்.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய எட்மொண்டன் அணி 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் இலக்குடன் வான்கவுவர் நைட்ஸ் அணி களமிறங்கியது. ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாகவும் ,அதிரடியாகவும் விளையாடிய கெயில் 13 -வது ஓவரில் பாக்கிஸ்தான் வீரர் ஷடாப் கான் வீசிய ஓவரை வெளுத்து வாங்கினார்.
unknown node13 -வது ஓவரில் முதல் இரண்டு பந்தில் சிக்ஸர் ,அடுத்த இரண்டு பந்தில் பௌண்டரி ,கடைசி இரண்டு பந்தில் மீண்டும் சிக்ஸர் என அந்த ஓவரில் 32 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் கெய்ல் 44 பந்தில் 94 ரன்கள் குவித்தார்.
இதனால் வான்கவுவர் நைட்ஸ் அணி வெற்றி பெற்றது.மேலும் கடந்த போட்டியில் கெய்ல் 122 ரன்கள் குவித்தார்.ஆனால் இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் சதத்தை தவறவிட்டார்.