அதிரடி மன்னன் ஜெகதீசனால் தமிழக அணி இமாலய சாதனை.! 500 ரன்களை கடந்து அசத்தல்...

விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் இன்று ஒரேநாளில் பல சாதனைகளை படைத்த தமிழ்நாடு அணி.

விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் இன்று ஒரேநாளில் பல சாதனைகளை படைத்த தமிழ்நாடு அணி.

விஜய் ஹசாரே தொடரில் இன்று தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்துள்ளது.

முதல்தர கிரிக்கெட்டில் ஒரு அணி 50 ஓவர்களில் 500 ரன்களைக் கடப்பது இதுவே முதல்முறையாகும். இதே போட்டியில் ஜெகதீசன் மற்றும் சுதர்சன் முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர். தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக ஜெகதீசன் 25போர்கள் மற்றும் 15 சிக்ஸர்களுடன் 277 ரன்கள் குவித்து மற்றொரு சாதனை படைத்தார்.

ஒருநாள் போட்டியில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக 277 ரன்கள் குவித்து ஜெகதீசன் வரலாற்று சாதனை படைத்தார். இன்றைய போட்டியில் ஜெகதீசன், அருணாச்சல பிரதேச அணிக்கெதிராக 5 ஆவது சதத்தை அடித்ததுடன் முதல்தர போட்டிகளில் தொடர்ச்சியாக 5 சதமடித்து சாதனையும் படைத்துள்ளார். இதன்மூலம் ஒரேபோட்டியில் தமிழ்நாடு அணி பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது.