#AFGvPAK: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு!

Afghanistan and Pakistan will face each other in today's match of the World Cup series.

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் பலப்பரிட்சை.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாட உள்ளன.

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சூப்பர் 12 குரூப் 2-வில் இருக்கும் பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டையும் வெற்றி பெற்றுள்ளது. இதுபோன்று, விளையாடிய ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:

ஹஸ்ரதுல்லா ஜசாய், முகமது ஷாஜாத்(விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா சத்ரான், முகமது நபி(கேப்டன்), அஸ்கர் ஆப்கான், குல்பாடின் நைப், ரஷித் கான், கரீம் ஜனத், நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), பாபர் அசாம்(கேப்டன்), ஃபகார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுஃப், ஷஹீன் அப்ரிடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.