2023 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 17 ) பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
விளையாடும் வீரர்கள்
இந்தியா :ரோஹித் சர்மா(c), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல்(wl), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
இலங்கை :பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(wk), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானகா (c), துனித் வெல்லலகே, துஷான் ஹேமந்த, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரன
இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ஓய்வுபெற்று இருந்தார்கள். அவர்கள் இன்று நடைபெறும் போட்டியில் அணிக்கு திரும்பியுள்ளார்கள். காயம் காரணமாக அக்சர் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேக்கப்பட்டுள்ளார் .
மேலும்,இரண்டு அணி வீரர்களும் கோப்பையை வெல்லவேண்டும் என்பதற்காக தீவிரமான முனைப்பில் இன்று களம் காண்கிறார்கள். இரண்டு அணியும் சம பலத்துடன் இருப்பதால் இன்றயை போட்டி சுவாரசியமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை இலங்கை அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் 8 போட்டிகளில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிகளில் மோதியுள்ளது. இதில்,5 முறை இந்திய அணியும், 3 முறை இலங்கை அணியும் மோதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
