இந்த ஆண்டு (2023) ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கி வரும் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி, இந்திய ஆண்கள் அணியில் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக திலக் வர்மா செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை உலககோப்பை கிரிக்கெட் போட்டியும் அக்டோபர் மாதத்திலே தொடங்கப்படவுள்ள காரணத்தால் சீனியர் வீரர்கள் அனைவரும் அந்த போட்டிக்கு தயாராகவுள்ளனர்.
எனவே, அணியில் இருக்கும் இளம் வீரர்கள் தான் இந்த முறையா ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் ஷிவம் மாவி பெயர் முன்னதாகவே இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில், தற்போது அவர் காயம் காரணமாக க விலகி உள்ளதாகவும் அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் அணியில் இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி
ருதுராஜ் கெய்க்வாட் (c), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங். , முகேஷ் குமார், சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் , ஆகாஷ் தீப்.
பெண்கள் அணி
ஹர்மன்ப்ரீத் கவுர் (c), ஸ்மிருதி மந்தனா (vc), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (wk) , அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, டிடாஸ்வர் சாது, ராஜேதேஷ்வர் சாது. , மின்னு மணி, கனிகா அஹுஜா, உமா செத்ரி , அனுஷா பாரெட்டி, பூஜா வஸ்த்ரகர்.
மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு சீனாவில் நடைபெறுகிறது ஏனென்றால, கடந்த ஆண்டே நடைபெற இருந்த இந்த போட்டிகள் கோவிட் காரணமாக நடைபெறாமல் போய்விட்டது. அதனை தொடர்ந்து தற்போது சீனாவின் ஹாங்சோ நகரில் போட்டிகள் நடைபெறவுள்ளது. மொத்தமாக 16 நாட்களில் 61 போட்டிகள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
