பாதுகாப்பாக சொந்த நாடு திரும்பிய ஆஸ்திரேலிய வீரர்கள்..!!

Thirty-eight Australian cricketers, including commentators, have returned home safely following the postponement of the IPL series.

ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் வர்ணனையாளர்கள் உட்பட  38 பேர் பத்திரமாக தனது சொந்த  நாடு திரும்பியுள்ளனர்.

14 வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீரர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டு ள்ளதால் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் விமானம் மூலம் தனது சொந்த நாட்டிற்க்கு திரும்பி செல்கின்றார்கள். அந்த வகையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் வார்னர், ஸ்மித், வர்ணனையாளர்கள் உட்பட  38 பேர் பத்திரமாக தனது சொந்த  நாடு திரும்பியுள்ளனர்.