ஐபிஎல் தொடர் தற்காலிக ஒத்திவைப்பு..! பிசிசிஐ அறிவிப்பு.!

The BCCI has said it will postpone the IPL series as players have been affected by Corono.

வீரர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது 13-வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு 14-வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் ஐபிஎல் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்காமல் வீரர்கள் மட்டும் விளையாடி வந்தனர். இதற்கிடையில், கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும், சென்னையில் சார்ந்த இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐபிஎல் போட்டி ரத்து செய்யவும், அல்லது ஐபிஎல் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என மும்பை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், வீரர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனோவால் நேற்று பெங்களூர், கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node