#BREAKING: உலகக் கோப்பை அணியில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி – பிசிசிஐ அறிவிப்பு
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.
2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக ஷமி சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக முகமது ஷமியை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்துள்ளது. முகமது ஷமி ஆஸ்திரேலியா சென்றுள்ளதால், பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னதாக பிரிஸ்பேனில் உள்ள அணியுடன் இணைவார் என்றும் முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் பேக்-அப் வீரர்களாக விரைவில் ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகு காயம் காரணமாக ஆஸ்திரேலியாவில் இம்மாதம் தொடங்கவுள்ள 2022-ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
???? NEWS ????: Shami replaces Bumrah In India’s ICC Men’s T20 World Cup Squad. #TeamIndia | #T20WorldCup
Details ????https://t.co/nVovMwmWpI
— BCCI (@BCCI) October 14, 2022