கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கேப்டன் விராட் கோலி...!!

Indian cricket captain Virat Kohli has been vaccinated against corona at a private hospital in Delhi

இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொண்டார்.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்ததா காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் அனைவரும் தனது சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் வராமல் தடுக்க அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டு வருகிறார்கள். சிலர் பயந்து கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருக்கின்றார்கள். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று  கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொண்டார். மேலும் அதற்கான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் வெளியீட்டு அதில் ” கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node