இங்கிலாந்து ஆல்ரவுண்டரான டேவிட் வில்லிக்கு கொரோனா..!

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதால், அவர் இனி டி20 பிளாஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார்

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதால், அவர் இனி டி20 பிளாஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேவிட் வில்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நானும் , எனது மனைவியும் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

unknown node

இதனுடன், வில்லியுடன் தொடர்பு கொண்ட அனைத்து வீரர்களும் 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வில்லியைத் தவிர, யார்க்ஷயர் அணியைச் சேர்ந்த மேலும் 3 வீரர்கள், டாம் கோஹ்லர், ஜோஷ் போஸ்டன் மற்றும் மேத்யூ ஃபிஷர் ஆகியோர் பாதுகாப்பு காரணமாக டி20 பிளாஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் டி20 பிளாஸ்ட்  போட்டியில் வில்லி யார்க்ஷயர் அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.