கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் தந்தை திலக் காலமானார்.!

கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவின் தந்தை திலக் யாதவ் உடல்நல குறைவால் காலமானார்.

கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவின் தந்தை திலக் யாதவ் உடல்நல குறைவால் காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் தந்தை திலக் யாதவ் காலமானார். அவருக்கு வயது 74. மல்யுத்த வீரரான திலக் யாதவ்  நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் இருந்தார்.

பிறகு, ஏற்பட்ட உடல் நல குறைவின் காரணமாக கடந்த சில நாட்களாகவே நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  அவருடைய உடல் நிலையும் சீராக இருந்தது. இதையடுத்து, வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.

இவருடைய திடீர் மறைவு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இவருடைய மறைவு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும், திலக் யாதவின் இறுதிச்சடங்கு நாக்பூரில் உள்ள கோலார் ஆற்றங்கரையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.