#IPL2021: ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்.. புதிய கேப்டனை அறிவித்த டெல்லி கேபிட்டல்ஸ்! வாழ்த்தும் முன்னனி வீரர்கள்!

Rishabh Pant has been named captain of the Delhi Capitals team in the 2021 IPL series. Suresh Raina congratulating him.

2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுரேஷ் ரெய்னா உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். அதனைதொடர்ந்து அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலும் விளையாடமாட்டார் என அறிவித்தார். அதனைதொடர்ந்து ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பதவி வகிக்கிறார். அவர் ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை யார் ஏற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷப் பந்த், ஷிகர் தவான் அல்லது ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர்களின் ஒருவர் கேப்டன் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அணி அறிவித்துள்ளது. இதற்கு சுரேஷ் ரெய்னா, உள்ளிட்ட முன்னிலை வீரர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

unknown node