டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் டெல்லியின் அருண் ஜேட்லி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதிரடியான பேட்டிங் லைனப் வைத்திருக்கும் மும்பையை முதலில் ஆடாவிட்டால் என்ன ஆகும் என ரசிகர்கள் ஒரு பக்கம் யோசித்த நிலையில், அக்சர் படேல் சிறப்பாக கேப்டன் சி செய்தி மும்பையை கட்டுப்படுத்திவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.
மும்பை அணி தனது இன்னிங்சின் தொடக்க ஆட்டத்தில் விக்கெட்களை சர சரவென விக்கெட்களை இழந்தது என்று கூறலாம். இந்த போட்டிக்கு முன்னதாக கொல்கத்தாக்கு எதிரான போட்டியில் ரோஹித் மற்றும் ரியான் ரிகெல்டன் இருவரும் இணைந்து அதிரடி காட்டியிருந்தார்கள். அதே போலவே இந்த போட்டியிலும் அதிரடியான தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிகெல்டன் 9ரன் களுக்கு அட்டமிழந்து வெளியேறினார்.
அவருக்கு அடுத்ததாக வந்த திலக் வர்மாவும் வந்த வேகத்தில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். விக்கெட் ஒரு பக்கம் விழுந்த காரணத்தால் அதிரடியை குறைத்துவிட்டு ரோஹித் மற்றும் சூர்யகுமார் யாதவ் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அப்போது இப்படியே சென்றால் பெரிய இலக்கு வைக்க முடியாது என்பதால் ரோஹித் சர்மா அதிரடியில் இறங்க முடிவு செய்து ஒரு ஷாட் விளையாட அந்த பந்து நேராக ராணா கையில் சென்றது ரோஹித் (35) ரன்களுக்கு வெளியேறினார். அவர் விக்கெட் இழந்ததை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் நிதானமாக விளையாடி கொண்டு அரை சதமும் விளாசினார்.
மறுபுறம் ரோஹித்க்கு பிறகு வந்த ரூதர்ஃபோர்ட் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவருக்கு அடுத்ததாக சூர்யாவும் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் அணி 15.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 122-க்கு தடுமாறியது. இந்த நிலைமையில் இருந்து மீண்டு ஒரு டீசண்டான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என நமன் திர் (28) மற்றும் மிட்செல் சார்ட்னர் (18) நிதானமாக விளையாடினார்கள்.
இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியுள்ளது. மும்பையில் சிறப்பான பந்துவீச்சி இருப்பதாலும் அதே போல டெல்லியில் சிறப்பான பேட்டிங் இருப்பதாலும் போட்டி சற்று பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
