யாஹூவில் அதிகம் தேடப்பட்டவர்களில் தோனி மற்றும் விராட் கோலி

Dhoni and Virat Kohli have proved to be kings not only in cricket but also on social media and the internet.

கிரிக்கெட் போட்டியின் போக்கை நொடிக்கு நொடி மாற்றி அமைப்பதில் தோனி மற்றும் விராட் கோலி வல்லவர்கள்.இவர்கள் கிரிக்கெட்டில் மட்டுமல்ல சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்திலும் ராஜாக்கள் என்று நிருபித்து காட்டியுள்ளனர்.

யாகூ(Yahoo) சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ஒருவர். இவர்கள் தேடல்களின் முதல் 20 பேர் கொண்ட பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது .

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அனைத்து துறைகளிலும் பல நிகழ்வுகளை நிறுத்தி வைத்திருந்தாலும், சில ஆளுமைகள் எப்போதும் கவனத்தை ஈர்த்தனர்.யாகூ வெளியிட்டுள்ள முதல் 20 பேர் கொண்ட பட்டியலில் விராட் கோலி 19 வது இடத்தையும், எம்.எஸ்.தோனி 11 வது இடத்தையும் பிடித்துள்ளனர் . தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் முதலிடத்தை பிடித்துள்ளார் .இவர் கடந்த ஜூன் மாதம் காலமானார் இது குறித்த விசாரணை நடந்து வருகிறது.