தோனிக்கு 42 வயது...இது தான் அவருக்கு கடைசி ஐபிஎல்...சி.எஸ்.கே வீரர் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 42 வயதாகியும் இன்னும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.  ஆகஸ்ட் 2020 தோனி சர்வதேச கிரிக்கெட்டில்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 42 வயதாகியும் இன்னும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.  ஆகஸ்ட் 2020 தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎலில் மட்டும் விளையாடி வருகிறார். அவர்  தலைமையில் தான் சென்னை அணி இதுவரை 4 முறை கோப்பைகளை வென்றுள்ளது.

unknown node

இந்த சீசனும் தோனி அருமையாக விளையாடி வருகிறார்.  இதற்கிடையில், அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா..?  மாட்டாரா..?  என்கிற கேள்வி ஒரு பக்கம் எழுந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் ஐபிஎல்லில் ஒரு வீரராக எம்எஸ் தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என கூறி உள்ளார்.

unknown node

இது குறித்து பேசிய  கேதர் ஜாதவ் ” தோனிக்கு இந்த ஜூலை மாதம் வந்தால்  42 வயதாகிறது. அவர் ஃபிட் என்றாலும் தோனியும் ஒரு மனிதர்தான். எனவே, இது அவரது கடைசி சீசனாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே , இந்த சீசனில் அவரது எந்தப் போட்டியையும் ரசிகர்கள் தவறவிடக் கூடாது.

unknown node

அவர் களத்தில் இருக்கும் ஒவ்வொரு பந்தையும் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நானும் பார்த்து கொண்டு இருக்கிறேன். ஐபிஎல்லில் ஒரு வீரராக எம்எஸ் தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதை 2,000 சதவீதம் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என கூறியுள்ளார். இந்த தகவலை பார்த்த தோனி ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர்.