#Ind vs Eng:ஏமாற்றம் தந்த புஜாரா 2 விக்கெட்களை இழந்து நிதான ஆட்டத்தில் இந்திய அணி 91-2 (30 OVER)

The third Test against England is being played day and night in Ahmedabad. Disappointed Pujara lost 2 wickets in a relaxed match

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 112 ரன்களுக்கு சுருண்டது.

அதன் பின்பு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை ஆடி வந்தனர்.இதற்கிடையில் சுப்மான் கில் 51 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஃப்ரா வீசிய பந்தில் ஜாக் கிராலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்பு களமிறங்கிய புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் அக் லீச் வீசிய பந்தில் LBW ஆகி வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.தற்பொழுது இந்திய அணி 91-2 (30 OVER) விளையாடி வருகிறது.களத்தில் ரோஹித் ஷர்மா 53(69) மற்றும் விராட் கோலி 24(41) உள்ளனர்.