விடாமல் துரத்தும் இங்கிலாந்து அணி இன்னும் 130 ரன்களே தேவை வெற்றி யாருக்கு ?

England need 130 more runs to win Who will win?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்கள் இழப்புக்கு  329 ரன்களை எடுத்தது.

அதன்பின்பு களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது இதில் முதல் ஓவரிலேயே ஜேசன் ராய் விக்கெட்டையும் மூன்றாவது ஓவரில் ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டையும் இழந்தது.

அதன்பின்பு தமிழக வீரர் நடராஜன் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை இழந்தார்.தாகூர் ஜோஸ் பட்லர் மற்றும் லிவிங்ஸ்டன் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தார்.எனினும் இங்கிலாந்து அணி விடாப்பிடியாக தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறது தற்போது வரை 31 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆன புவனேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளையும் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் நடராஜன் ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.

200-7 (31 Ov)